நடிகர் விநாயகன் கோப்புப் படம்
செய்திகள்

ஜெயிலர் வில்லன் மீண்டும் கைது!

விமான நிலையத்தில் மது போதையில் சட்டையில்லாமல் கூச்சலிட்டதால் நடிகர் விநாயகன் கைது

DIN

ஹைதராபாத் விமான நிலையத்தில் மது போதையில் சட்டையில்லாமல் கூச்சலிட்டதால் நடிகர் விநாயகன் கைது செய்யப்பட்டார்.

கொச்சியில் இருந்து ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து கோவாவுக்கு செல்லவிருந்த மலையாள நடிகர் விநாயகன், சனிக்கிழமை மாலையில் விமான நிலையத்தில் சட்டை இல்லாமல், தரையில் அமர்ந்துகொண்டு, அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளை நோக்கி, கூச்சலிட்டுள்ளார்.

இதனையடுத்து, நடிகர் விநாயகன் மது அருந்தியிருப்பதை உறுதி செய்த மத்திய தொழில் பாதுகாப்புக் குழு, அவரைக் கைது செய்தனர். பின்னர், அவரை உள்ளூர் காவல்நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

பொது இடத்தில் இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதுமட்டுமின்றி, இதுபோன்ற சிக்கலில் சிக்குவது இது முதல் முறை அல்ல; விநாயகன் தனது குடியிருப்பில் இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி, கைது செய்யப்பட்ட பின்னர், காவல் நிலையத்திலும் இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT