அடுத்த வாரம் வெளியாகவிருக்கும் படங்களின் போஸ்டர்.  
செய்திகள்

அடுத்த வாரம் (செப்.20) 8 தமிழ்ப் படங்கள் ரிலீஸ்!

அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை (செப்.20) 8 தமிழ்ப் படங்கள் வெளியாக இருக்கின்றன.

DIN

கடந்த செப்.5ஆம் தேதி வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெளியானது. அதை தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்கள் தற்போது எதுவும் வெளியாகவில்லை.

அக்டோபர் மாதம் பெரிய படங்கள் ரிலீஸ் ஆகவிருப்பதால் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை (செப்.20) 8 தமிழப் படங்கள் வெளியாகவிருக்கின்றன.

ஹிப்ஹாப் ஆதி, சசிகுமார், அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், சதீஷ் நடித்துள்ள படங்கள் வெளியாகவிருக்கின்றன.

1. கடைசி உலகக் போர்

மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி.

அவரே தயாரித்து இயக்கி நடிக்கும் இப்படம் செப். 20 ஆம் தேதி வெளியாகிறது.

2. லப்பர் பந்து

நடிகர்கள் அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் இணைந்து நடித்துள்ள லப்பர் பந்து படத்தினை தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ளார்.

இதில் ஸ்வாஸ்திகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பால சரவணனன், தேவ தர்ஷிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

3. நந்தன்

‘உடன்பிறப்பே’ படத்தை இயக்கிய இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்த ‘நந்தன்’ திரைப்படத்தில் சசிகுமார் உடன் ஸ்ருதி பெரியசாமி நடித்துள்ளார்.

இரா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

4. சட்டம் என் கையில்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் நடிகர் சதீஷ். தமிழின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார். முன்னதாக நாயகனாக அறிமுகமான நாய் சேகர் திரைப்படத்தைத் தொடர்ந்து சட்டம் என் கையில் படத்தில் நடித்துள்ள இப்படத்தை சாச்சி இயக்குகிறார்.

5. கோழிப்பண்ணை செல்லதுரை

இயக்குநர் சீனு ராமசாமி ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ என்கிற பெயரில் புதிய படத்தை இயக்கியுள்ளார். அறிமுக நாயகன் ஏகன், யோகி பாபு மற்றும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தேனி பெரியகுளம் பகுதியில் நடைபெற்று முடிந்தது.

திரைவெளியீட்டு முன்பாகவே, ஆக்லாந்து சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்ப்படம் என்கிற பெயரையும் பெற்றுள்ளது.

6. தோனிமா

காளி வெங்கட், ரோஷினி பிரகாஷ், வைசவ் ராஜ், விவேக் பிரசன்னா, கண்ணன் பொன்னையா, பி.எல்.தேனப்பன் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘தோனிமா’. இதை சிகை, பக்ரீத் படங்களை இயக்கிய ஜெகதீசன் சுப்பு இயக்கியுள்ளார்.

7. தோழர் சேகுவாரா

90-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் சத்யராஜ். இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகன், வில்லன், குணசித்திரம், நகைச்சுவை என ஏராளமானப் படங்களில் நடித்துள்ளார்.

அலெக்ஸ் இயக்கும் தோழர் சேகுவேரா படத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

8. தி கன்ஃபஷன்

அர்மோன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள தி கன்ஃபஷன் படத்தை ஜோ கியாவன்னி இயக்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT