கங்குவா போஸ்டர்.  
செய்திகள்

கங்குவா ரிலீஸ் தேதி எப்போது? படக்குழு பகிர்ந்த போஸ்டர்!

கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அப்டேட் வெளியிட்டுள்ளது.

DIN

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றதால், சூர்யா - சிவா கூட்டணியில் உருவான கங்குவாவுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இப்படத்தை அக்டோபர் 10 ஆம் தேதி வெளியிடுவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதற்காக, இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் படமும் அக். 10 ஆம் தேதிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

கங்குவா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை சூர்யா ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

திட்டமிட்ட தேதிக்கு வெளியிடாமல் ரஜினி படத்தைப் பார்த்து பயப்படுவதா? என தகாத வார்த்தைகளாலும் திட்டி பதிவிட்டு வந்தனர்.

ஹிந்தியில் மல்டிபிளக்ஸில் கங்குவா வெளியாகவுள்ளது. 3,000க்கும் அதிகமான திரைகளில் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில், நாளை காலை 11 மணிக்கு முக்கியமான அப்டேட் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

காரைத் தாக்கிய யானை! நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்! | Elephant attack

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி

உனது கண்களில்... ரவீனா தாஹா!

SCROLL FOR NEXT