செய்திகள்

வேட்டையன்: புதிய பாடல் வெளியானது!

நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தின் ஹன்டர் வன்டார் பாருடா பாடல் வெளியாகியுள்ளது.

DIN

ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இதில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் வேளையில், இத்திரைப்படம் வருகிற அக்டோபர் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

வேட்டையன் படத்தின் முதல் பாடல் ‘மனசிலாயோ’ சமீபத்தில் வெளியாகி 20 மில்லியன் (2 கோடி) யூடியூப் பார்வைகளைக் கடந்துள்ளது.

நேற்று, துஷாரா விஜய் ‘சரண்யா’ கதாபாத்திரத்திலும், ரித்திகா சிங் ’ரூபா’ கதாபாத்திரத்திலும் நடிகை மஞ்சு வாரியர் ‘தாரா’ கதாபாத்திரத்திலும் அமிதாப் பச்சன் சத்யதேவ் பாத்திரத்திலும் நடித்துள்ளதாக படக்குழு விடியோ வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் ஹன்டர் வந்துட்டார் பாடல் வெளியாகியுள்ளது. இன்னொரு ஹுக்கும் பாடலாக இருக்குமென எதிர்பார்க்கப்பட்ட இந்தப் பாடல் வெளியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT