சின்னத்திரை நடிகை ஸ்ரேயா தனது கணவர் சித்துவின் பிறந்தநாளைக் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
காதலித்து திருமணம் செய்துகொண்ட சித்து - ஸ்ரேயா தம்பதி, வள்ளியின் வேலன் தொடரில் நாயகன் - நாயகியாக நடித்து வருகின்றனர்.
சின்னத்திரை காதல் தம்பதிகளான சித்து - ஸ்ரேயா அஞ்சனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்ற தொடரில் முதல்முறையாக ஒன்றாக நடித்த இவர்களிடையே காதல் மலர்ந்தது.
திருமணம் தொடரில் நடித்ததன் மூலம் காதலித்த இவர்கள், நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ரஜினி என்ற ஜீ தமிழ் தொடரில் ஸ்ரேயா நடித்தார். அந்தத் தொடருக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்பட்டது.
சமூக வலைதளத்தில் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவேற்றுவது ஸ்ரேயாவின் வழக்கம். சமூக வலைதளத்தில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய இந்த ஜோடியின் விடியோக்கள் அவ்வபோது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெறும்.
தற்போது வள்ளியின் வேலன் என்ற தொடரில் ஸ்ரேயா - சித்து தம்பதி நடித்து வருகின்றனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
தந்தையின் அன்புக்கு ஏங்கும் கிராமத்துப் பெண் பாத்திரத்தில் ஸ்ரேயாவும், அவரின் வீட்டில் பணிபுரியும் நபராக சித்துவும் நடிக்கின்றனர்.
படிக்க | குக் வித் கோமாளியில்.. மணிமேகலைக்கு பதிலாக களமிறங்கும் புகழ்!
கணவனும் மனைவியும் சேர்ந்து நடிப்பதால் இத்தொடரில் இருவரின் நடிப்பும் கச்சிதமாக அமையும் என்றும், காதல் காட்சிகள் தத்ரூபமாக இருக்கும் எனவும் ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கணவர் சித்துவின் பிறந்தநாளை, ஸ்ரேயா தனிப்பட்ட முறையில் சிறப்பாகக் கொண்டாடியுள்ளார். அதன் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளார். சித்துவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.