செய்திகள்

ஆச்சரியப்படுத்தும் வசூல்... பிளாக்பஸ்டரான கிஷ்கிந்தா காண்டம்!

ஆசிஃப் அலியின் படம் கமர்சியல் வெற்றி...

DIN

நடிகர் ஆசிஃப் அலி நடிப்பில் உருவான கிஷ்கிந்தா காண்டம் திரைப்படம் பெரிய வசூலை ஈட்டியுள்ளது.

மலையாள சினிமா இந்தாண்டிலும் நல்ல திரைப்படங்களையே கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஒரு சில படங்களைத் தவிர்த்து பெரும்பாலும் கதையம்சமுள்ள படங்களே திரைக்கு வந்துள்ளன.

அந்த வகையில், ஓணம் வெளியீடாக டோவினோ தாமஸின் ஏஆர்எம் மற்றும் ஆசிஃப் அலியின் கிஷ்கிந்தா காண்டம் திரைப்படங்கள் வெளியாகின.

இதில், ஏஆர்எம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ. 90 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வணிக வெற்றியை அடைந்துள்ளது.

அதேநேரம், தின்ஜித் அய்யதன் இயக்கத்தில் உருவான கிஷ்கிந்தா காண்டம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடிப்பில் முற்றிலும் எதிர்பார்க்காத மன மாற்றங்களுடன் உருவாகியுள்ளதாகக் கூறப்படும் இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 54.5 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாம்.

ரூ. 7 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவான இப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ஆசிஃப் அலி தலவன் (thalavan), அடியோஸ் அமிகோ(adios amigo) ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து கிஷ்கிந்தா காண்டத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT