முகப்பு
செய்திகள்

விஜய் சேதுபதி - 51 படத்தின் பெயர் இதுவா?

நடிகர் விஜய் சேதுபதியின் 51-வது படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 9 பிப்ரவரி, 2024 at 1:41 PM
பகிர்:

தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கில் கலக்கிவரும் விஜய் சேதுபதி தனது 52வது படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது. 

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் இயக்குநர் பி.ஆறுமுகக் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்த அவரது 51-வது படம் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு ‘சத்தியமா பொய்’ என பெயரிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தப் படத்தில் ருக்மணி, யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிராபகரன் இசையமைக்க உள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →