பாராட்டுகளைப் பெறும் கோர்ட்!
கோர்ட் திரைப்படம் குறித்து...
ஓடிடியில் வெளியான தெலுங்குப் படமான கோர்ட் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
நடிகர் நானி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ராம் ஜெகதீஸ் இயக்கத்தில் உருவான கோர்ட் - ஸ்டேட் விர்சஸ் நோபடி (court state vs a nobody) திரைப்படம் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றதுடன் ரூ. 60 கோடி வரை வசூலித்து வெற்றிப் படமானது.
இதில், பிரியதர்ஷினி புலிகொண்டா, ரோகினி, ஹர்ஷா வரதன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
Advertisement
Advertisement
போக்சோ வழக்கால் பாதிக்கப்படும் இளைஞன், அவரை நிரபராதியாக்க வழக்கை நடத்தும் வழக்கறிஞர் என நீதிமன்றத்தை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகியிருந்தது.
தொடர்ந்து, சில நாள்களுக்கு முன் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ் உள்பட பான் இந்திய மொழிகளில் இப்படம் வெளியானது.
இந்த நிலையில், ஓடிடி வெளியீட்டிற்குப் பின் பலமொழி ரசிகர்களும் படம் பேசிய முக்கியத்துவத்தைப் பாராட்டி வருகின்றனர். இதனால், இப்படம் ஓடிடியிலும் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது.
இதையும் படிக்க: மறுவெளியீடாகும் கேப்டன் பிரபாகரன்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.