மணக்கோலத்தில் பிரியங்கா  இன்ஸ்டாகிராம்
செய்திகள்

தொகுப்பாளர் பிரியங்காவுக்கு திடீர் திருமணம்! வைரலாகும் விடியோ!

தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு மீண்டும் திருமணம் நடைபெற்றதாக பரவும் விடியோ குறித்து...

DIN

சின்ன திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு இன்று (ஏப். 16) திருமணம் நடைபெற்றது.

ஏற்கெனவே திருமணம் நடைபெற்று விவாகரத்து பெற்ற பிரியங்கா, தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்த நிலையில், இன்று வசி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

ஆனால், இது குறித்து திருமணப் புகைப்படங்களை அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மணக்கோலத்தில் பிரியங்கா

விஜய் தொலைக்காட்சியில் நட்சத்திர தொகுப்பாளராக வலம் வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் உடன் தொகுத்து வழங்கும் இவர், தனது தனித்துவமான நகைச்சுவை உணர்வுக்கு பிரபலமானவர்.

பாடல் பாடும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாலும், நகைச்சுவை ரசனையோடு நிகழ்ச்சியை கொண்டுசெல்வதால், அவருக்கு ரசிகர்கள் ஏராளம். இதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. கடந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்று பெரும் திருப்பத்தை அந்நிகழ்ச்சியில் ஏற்படுத்தினார்.

குடும்பத்துடன் பிரியங்கா

இதனிடையே பிரியங்காவுக்கு இன்று திருமணம் நடைபெற்றது. குடும்ப உறவினரான வசி என்பவரை திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் பலர் கலந்துகொண்டனர்.

திருமண வாழ்க்கையில் இணைந்துள்ள பிரியங்காவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | சின்ன திரை நடிகைக்கு தாலி கட்டிய மற்றொரு நடிகை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விலங்குகளின் அன்பில் அப்பழுக்கு இல்லை!

மோா்தானா அணையிலிருந்து 2,300 கனஅடி உபரிநீா் வெளியேற்றம்

இன்று 12 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

முதல்வா் கோப்பை போட்டிகள்: சென்னை முதலிடம்! பெனி குவேபா, காவ்யாவுக்கு தங்கம்!

மழை ஆடியதால் ஆஸி.-இலங்கை ஆட்டம் ரத்து!

SCROLL FOR NEXT