நடிகர் ரஜினி நடித்த கூலி படத்தின் அதிகாரபூர்வ வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் இந்தப் படம் முதல் நாளில் மட்டும் ரூ.151 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்மூலமாக, தமிழில் முதல் நாளில் அதிகமாக வசூலித்த முதல் திரைப்படம் என்ற சாதனையை கூலி படைத்துள்ளது.
இதற்கு முன்பாக விஜய்யின் கூலி திரைப்படம் ரூ.148 கோடி வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் ரஜினி, சத்யராஜ், ஆமிர் கான், சௌபின் சாஹிர், நாகார்ஜுனா, பூஜா ஹெக்டே, ஷ்ருதி ஹாசன் எனப் பலர் நடித்துள்ளார்கள்.
ரூ.1000 கோடி வசூலிக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லோகேஷ் கனகராஜின் மோசமான படமென சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் விடுமுறை நாள்கள் என்பதால் வரும் மூன்று நாள்களும் படம் வசூலில் அசத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் போஸ்டரில், “தி ரெக்கார்ட் மேக்கர், தி ரெக்கார்ட் பிரேக்கர்” எனக் குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.