லியோ, கூலி பட போஸ்டர்கள்.  படங்கள்: செவன் ஸ்கிரீன், சன் பிக்சர்ஸ்.
செய்திகள்

விஜய்யை முந்தினாரா ரஜினி? விமர்சனங்களால் தடுமாறும் கூலி!

ரஜினியின் கூலி படத்தின் முதல்நாள் வசூல் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினியின் கூலி படத்தின் முதல்நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி விஜய்யின் முதல்நாள் வசூலை முறியடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த கூலி திரைப்படம் நேற்று (ஆக.14) உலகம் முழுவதும் வெளியானது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் ரஜினி, சத்யராஜ், ஆமிர் கான், சௌபின் சாஹிர், நாகார்ஜுனா, பூஜா ஹெக்டே, ஷ்ருதி ஹாசன் எனப் பலர் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில், முதல் நாளில் கூலி திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.130 கோடி வசூலித்ததாக ஆங்கில ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடித்த லியோ திரைப்படம் முதல்நாளில் ரூ.148 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

கூலி படத்தின் தயாரிப்பு நிறுவனம் இன்னும் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிடாததால் பலரும் பலவிதமான தகவல்களை தெரிவித்து வருகிறார்கள்.

ரூ.1000 கோடி வசூலிக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லோகேஷ் கனகராஜின் மோசமான படமென சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Information about the first day collections of Rajinikanth's film Coolie has been released. According to this, it is said that it did not break Vijay's first day collections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுக்கு வரும் ரொனால்டோ..! எஃப்சி கோவா உடன் மோதல்!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை!

மூர்த்தி நாயனார்

“அதிமுக ஏன் தலையிடவில்லை?” தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்து தொல். திருமாவளவன் விமர்சனம்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT