பிரபல ராப் பாடகர் வேடன் மீது மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளனர்.
மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமானவர் ராப் பாடகர் வேடன். வேற்றுமைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் எதிராகத் தொடர்ந்து பாடி வருவதால் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. சுயாதீன பாடகராக மட்டமல்லாமல் திரைப்படங்களிலும் பாடி வருகிறார்.
சில நாள்களுக்கு முன், தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி வேடன் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் மருத்துவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கிற்காக வேடன் முன்ஜாமீன் கேட்டு மனு அளித்திருந்தார். அந்த விசாரணை இன்று நடைபெறுகிறது.
இந்த நிலையில், வேடன் மீது மேலும் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைப் புகாரை அளித்துள்ளனர்.
அதில் ஒரு பெண் இசை விவாதம் செய்வதற்காகக் கொச்சிக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மற்றொரு பெண் வேடனின் இசையால் ஈர்க்கப்பட்ட தன்னை வேடன் பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர்.
இது வேடன் ரசிகர்களிடையையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து பாலியல் புகார்களைச் சந்திப்பதால் மலையாள திரைத்துறையினரிடம் சலசலப்பு எற்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநரின் புதிய பட போஸ்டர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.