அனுமன் போஸ்டர், அனுராக் காஷ்யப்.  படம்: இன்ஸ்டா / விஜய் சுப்பிரமணியம், அனுராக் காஷ்யப்.
செய்திகள்

முழுமையாக ஏஐ உதவியால் உருவாகும் ஹிந்தி திரைப்படம்: அனுராக் காஷ்யப் எதிர்ப்பு!

பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் பதிவு குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது இன்ஸ்டா பக்கத்தில் முழுவதுமாக ஏஐ-ஆல் உருவாக்கப்பட்ட படத்துக்கு கடுமையான கண்டனத்தை முன்வைத்துள்ளார்.

இந்தப் படத்தை தயாரிக்கும் விஜய் சுப்பிரமணியமை டேக் செய்து அனுராக் காஷ்யப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

முழுவதுமாக ஏஐ உதவியுடன் ’சிரஞ்சீவி - அனுமன் - தி ஈடர்னல்’ என்ற படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை அபுடான்டியா என்டர்டெயின்மென்ட் தயாரித்து வருகிறது.

சிரஞ்சீவி - அனுமன் - தி ஈடர்னல் பட போஸ்டர்.

இந்தப் படத்திற்காக கலேரி 5-இல் 50 என்ஜினியர்கள் வேலை பார்த்து வருவதாகப் படக்குழுவினர் கூறியிருந்தனர்.

இந்நிலையில், அனுராக் காய்ஷ்யப் கூறியதாவது:

வாழ்த்துகள் விஜய் சுப்ரமணியம். முன்னதாக எழுத்தாளர், இயக்குநர்களை முன்னிருத்திய இவரது தலைமையிலான நிறுவனம்தான் தற்போது ஏஐ உதவியால் படத்தை உருவாக்கியுள்ளது.

இறுதியில், இந்த நிறுவனங்கள் உங்களிடமிருந்து பணத்தை சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்துள்ளது.

துருக்கி என்ற வியாபாரப் பெயர் வந்ததுபோல உங்களால் பணத்தை சம்பாதிக்க முடியாததால் நிறுவனங்கள் ஏஐ பக்கம் சென்றுவிட்டார்கள்.

ஹிந்தி கலைஞர்களுக்கு முதுகுத் தண்டு இருக்கிறதா?

எந்த ஒரு கலைஞரும் அல்லது தன்னைக் கலைஞராக கருதும் எவரும் தங்களுக்கு முதுகுத் தண்டு இருந்தால் சுப்ரமணியத்தைக் கேள்வி கேட்க வேண்டும்; இல்லாவிட்டால் உங்களது நடிப்பைவிட ஏஐ சிறப்பாக நடிக்கிறதென நினைக்கும் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும்.

தற்போது, ஹிந்தி திரைப்படத் துறையில் முதுகுத் தண்டு இல்லாத, கோழை கலைஞர்களுக்கான எதிர்காலமாக மாறுகிறது.

சிறப்பாக செய்துள்ளீர்கள் சுப்ரமணியம். உங்களுக்கு வெட்கம் கிடையாது. நீங்கள் சாக்கடையில் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இந்தப் படம் அடுத்தாண்டு அனுமன் ஜெயந்திக்கு வெளியாக இருக்கிறது.

Filmmaker Anurag Kashyap expressed his disappointment over the AI generated film "Chiranjeevi Hanuman- The Eternal".

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஓட்டுநருக்கு 27 ஆண்டுகள் சிறை

தொழிலாளி கொலை: ஒருவா் கைது

கணக்கீட்டுப் படிவம் நிரப்பும் பணி தீவிரம்

வாக்குச்சாவடி மையங்களில் நாளை சிறப்பு உதவி மையம்

எக்ஸ்காலிபா், ஜாவ்லின் ஏவுகணை உபகரணங்கள்: இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்

SCROLL FOR NEXT