செய்திகள்

தமிழில் அறிமுகமாகும் கேஜிஎஃப் இசையமைப்பாளர்!

தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகும் கேஜிஎஃப் இசையமைப்பாளர்...

தினமணி செய்திச் சேவை

இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.

ஏஜிஎஸ் தயாரிக்கும் 28-வது திரைப்படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நாயகனாகவும் நடிகை அபிராமி நாயகியாகவும் ப்ரீத்தி முகுந்தன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள்.

லவ் டுடே படத்தின் துணை இயக்குநர் சுபாஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் ’கற்றது வீண்’ என்ற குறும்படத்தை எடுத்தவர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில், இதன் இசையமைப்பாளராக ரவி பஸ்ரூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேஜிஎஃப் திரைப்படம் மூலம் பிரபலமடைந்த ரவி பஸ்ரூர், சலார் படத்திற்கு இசையமைத்திருந்தார். இவர் தமிழ் சினிமாவுக்கு இசையமைக்கவுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

music director ravi basrur debut his tamil movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 நாள்களில் ரூ. 235 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் -1

நேபாள மக்களுடன் இந்தியா துணை நிற்கும்: பிரதமா் மோடி

விவசாயிகள் சுதேசி பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 05-10-2025

கம்பனின் தமிழமுதம் - 65: காற்றுக் கொந்தளிப்பில் விமானங்கள்!

SCROLL FOR NEXT