ரியோ ராஜ் - 6 பெயர் போஸ்டர்!
நடிகர் ரியோ ராஜின் 6வது படம் குறித்து....
நடிகர் ரியோ ராஜ் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பெயர் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் ரியோ ராஜ் வளர்ந்துவரும் இளம் கதாநாயகனாக உள்ளார். இவர் நடிப்பில் வெளியான ஜோ, ஆண்பாவம் பொல்லாதது ஆகிய திரைப்படங்கள் நல்ல வசூலைப் பெற்று வணிக ரீதியாகவும் வெற்றிப்படங்களாகின.
இந்த நிலையில், ரியோ ராஜ் நாயகனாக நடிக்கவுள்ள 6-வது திரைப்படத்திற்கு ராம் இன் லீலா எனப் பெயரிட்டுள்ள போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Advertisement
Advertisement
அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்கும் இப்படத்திற்கு அங்கித் மேனன் இசையமைக்கிறார். நாயகியாக வர்திகா நடிக்க உள்ளார்.
போஸ்டரை பார்த்தால் இப்படம் காதல் மற்றும் உறவுச் சிக்கல்களை மையமாக வைத்து உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இப்படத்திலிருந்து ரியோ ராஜ் தன் பெயரை ரியோவாக மாற்றியுள்ளார்.
இதையும் படிக்க: அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் மம்மூட்டி!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.