இயக்குநர் பிரவீன் பென்னெட் இயக்கும் புதிய தொடரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சரவணன் மீனாட்சி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி, நம்ம வீட்டு பொண்ணு, வீட்டுக்கு வீடு வாசப்படி உள்ளிட்ட வெற்றித் தொடர்களை இயக்கியவர் பிரவீன் பென்னட்.
இவர் இயக்கும் தொடர்களைப் பார்ப்பதற்கே தனி ரசிகர்கள் உள்ளனர். இவர் இயக்கும் தொடர்கள் எப்போதும் டிஆர்பியில் முன்னணியில் இருக்கும்.
இவர் தற்போது மகாநதி தொடரை இயக்கி வருகிறார். இத்தொடரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் இயக்குநர் பிரவீன் பென்னட் புதிய தொடரை இயக்குகிறார். இந்தத் தொடருக்கு அழகே அழகு என்று பெயரிடப்பட்டுள்ளது.
முன்னோட்டக் காட்சிக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் இந்தத் தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
இத்தொடரை குளோபல் வில்லேஜர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. செல்லமே தொடர் நடிகை அன்ஷிதா, கனா தொடர் நாயகி தர்ஷனா, நீ நான் காதல் நாயகன் பிரேம் ஜேக்கப் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
குளோபல் வில்லேஜர்ஸ் நிறுவனம் மகாநதி, அய்யனார் துணை ஆகிய தொடர்களை தயாரித்து வரும் நிலையில், இப்புதிய தொடரையும் தயாரிக்கிறது. இந்தத் தொடருக்கான வசனங்களை பிரியா தம்பி எழுதுகிறார்.
இயக்குநர் பிரவீன் பென்னெட் இயக்கும் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தைப் பிடிக்கும். பிரியா தம்பியின் வசனம் இந்தத் தொடருக்கு கூடுதல் பலமாகவே பார்க்கப்படுகிறது.
மகாநதி தொடரை பிரவீன் பென்னெட் இயக்கி வரும் நிலையில், அவரின் புதிய தொடரான அழகே அழகு விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.
இதனால் மகாநதி தொடர் முடிக்கப்படுகிறாதா? என்று ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிக்க: அனுபமாவின் லாக் டவுன் படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.