செய்திகள்

அனுபமாவின் லாக் டவுன் படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு!

அனுபமாவின் லாக் டவுன் திரைப்படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவான லாக் டவுன் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

‘பிரேமம்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இப்படத்தின் வெற்றியின் மூலம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடிக்க துவங்கினார்.

இவர் நடிப்பில் வெளியான ‘கார்த்திகேயா - 2’ , ‘18 பேஜஸ்’ டில்லு ஸ்கொயர், டிராகன் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றன.

இறுதியாக, இயக்குநர் மாரி செல்வராஜின் பைசன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் நடிப்பு கவனம் பெற்றது.

இதனிடையே, லைகா நிறுவனம் தயாரிப்பில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இப்படத்துக்கு ‘லாக் டவுன்’ பெயரிடப்பட்டிருந்தது.

ஏஆர் ஜீவா இயக்கத்தில் உருவான இப்படத்துக்கு என்ஆர் ரகுநாதன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளனர். இதில், நடிகர்கள் சார்லி, நிரோஷா, மஹானா சஞ்சீவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நீண்ட நாள்களாக வெளியீட்டிற்காகக் காத்திருந்த இப்படம் டிச. 5 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வானிலை சூழல் காரணமாக, லாக்டவுன் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக லைகா தயாரிப்பு அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Regarding the postponement of Anupama's Lockdown movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிஜாப்பூர் துப்பாக்கிச்சூடு: 18 ஆக உயர்ந்த நக்சல் பலி!

நடிகர் கார்த்தியின் வா வாத்தியார் படத்தை வெளியிட இடைக்காலத் தடை!

“சினிமாவை உயிராக நேசித்தவர் AVM சரவணன்” நடிகர் ரஜினிகாந்த்

இயக்குநர் பிரவீன் பென்னெட்டின் புதிய தொடர் அறிவிப்பு! மகாநதி சீரியல் நிறைவடைகிறதா?

சென்னையில் மீண்டும் மழை! அவ்வப்போது திடீர் மழை பெய்யலாம்!

SCROLL FOR NEXT