பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை நெட்பிளிக்ஸ் வாங்கும் ஒப்பந்தம் இறுதியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூற்றாண்டுக்கும் மேலாக உலகளவில் திரைப்படங்கள் தயாரிப்பு, விநியோகத்தில் முன்னணி வகிக்கும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை, அதன் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.7.44 லட்சம் கோடிக்கு நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வாங்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் ஸ்டூடியோக்கள், அவர்கள் தயாரித்த பிரபல திரைப்படங்கள், ஹெச்.பி.ஓ. மேக்ஸ் (HBO MAX) ஓடிடி தளம் ஆகியவற்றை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் கைவசம் இருந்த பிரபல டிசி காமிக்ஸ் திரைப்படங்கள், வெப் சீரிஸ் ஆகியவை அனைத்தும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமாகியுள்ளது.
இந்த நிலையில், ஒப்பந்தத்தின் அடிப்படையில் இறுதியாகியுள்ள தொகையான ரூ.7.44 லட்சம் கோடியை அடுத்த 12 முதல் 18 மாதங்களில் வார்னர் ப்ரோஸ் உரிமையாளர்களுக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வழங்கவுள்ளது.
இதனால், வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட ஹாரி பாட்டர் திரைப்படங்கள், டிசி சூப்பர் ஹீரோ படங்கள், கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப் சீரிஸ் உள்ளிட்டவை நெட்பிளிக்ஸில் வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் விற்பனைக்கு வருவதாக அறிவிப்பு வெளியானவுடன் அந்நிறுவனத்தை விலைக்கு வாங்க உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஜப்பானில் பாகுபலி: தி எபிக் சிறப்பு காட்சியில் பிரபாஸ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.