செய்திகள்

மம்மூட்டியின் களம்காவல்! கேரளத்தில் கூடுதலாக 100 திரைகள் ஒதுக்கீடு!

'களம்காவல்' திரைப்படத்துக்கு 360-க்கும் அதிகமான திரைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் மம்மூட்டியின் “களம்காவல்” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், கேரளத்தில் 360-க்கும் அதிகமான திரைகளில் திரையிடப்படுகிறது.

நடிகர்கள் மம்மூட்டி மற்றும் விநாயகன் ஆகியோர் நடிப்பில் உருவான “களம்காவல்” திரைப்படம் நேற்று (டிச. 5) திரையரங்குகளில் வெளியானது. c

துல்கர் சல்மானின் ‘குரூப்’ திரைப்படத்தின் எழுத்தாளர் ஜிதின் கே. ஜோஸ் இயக்கத்தில் க்ரைம் திரில்லராக உருவான இந்தப் படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும், வெறும் ஒரு மணிநேரத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகி அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது.

இந்த நிலையில், ரசிகர்கள் தொடர்ந்து வரவேற்பு அளித்து வரும் நிலையில், களம்காவல் திரைப்படத்திற்கு ஒதுக்கப்பட்ட 260 திரைகள் 365 ஆக அதிகரித்துள்ளதாக, நடிகர் மம்மூட்டியின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: ஆச்சரியப்படுத்தும் துரந்தர் பட முதல்நாள் வசூல்!

Actor Mammootty's film "Kalamkaval" has received a good response and is being screened on more than 360 screens in Kerala.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!

பிராட்வே பேருந்து நிலையம் மறுசீரமைப்பு: இன்று முதல் ராயபுரம், தீவுத்திடலில் இருந்து பேருந்து இயக்கம்!

தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்யும்! சென்னையிலும்...

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT