செய்திகள்

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 9 வது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த சீசனை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதியே, இந்த புதிய சீசனையும் தனக்கே உரித்தான பாணியில் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாட்டர் மெலன் ஸ்டார் என அழைக்கப்படும் திவாகர், அரோரா சின்கிளேர், பீட் பாக்ஸ் கலைஞர் எஃப்.ஜே. , விஜே பார்வதி, துஷார், கனி, சின்ன திரை நடிகர் சபரி, நடிகை கெமி, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சின்ன திரை நடிகர் பிரவீன், யூடியூபர் சுபிக்‌ஷா, விக்கல்ஸ் விக்ரம், கமுருதீன் உள்ளிட்ட 20 பேர் போட்டியாளர்களாக களம் இறக்கப்பட்டனர்.

தொடர்ந்து, வைல்டு கார்டு மூலம் திவ்யா கணேஷ், சாண்ட்ரா, பிரஜன், அமித் பார்கவ் ஆகிய 4 பேர் நுழைந்தனர். போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆதிரை மீண்டும் வைல்டு கார்டு மூலம் உள்ளே வந்தார்

ஒவ்வொரு வாரமும் மக்களிடம் குறைந்த வாக்குகளைப் பெற்றவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவார். அதன்படி, கடந்த வாரங்களில் நந்தினி, இயக்குநர் பிரவீன் காந்தி, திருநங்கை அப்சரா, ஆதிரை, கலையரசன், பிரவீன், துஷார், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், கெமி ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற 11 பேர் நாமினேட் செய்யப்பட்டனர். ரம்யா தலைவர் ஆனதால் அவரை நாமினேட் செய்ய முடியாது. அரோரா, ஆதிரை, வியானா ஆகியோரும் நாமினேஷனில் இருந்து தப்பினர்.

நாமினேட் செய்யப்பட்ட 11 பேருக்கும் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில், குறைந்த வாக்குகளைப் பெற்று, இந்த வாரம் யாரும் எதிர்பாராத போட்டியாளர் பிரஜன் வெளியேறியுள்ளார்.

எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்றிரவு(டிச. 7) வெளியாகும் எபிசோடில் தெரியவரும்.

This information was revealed after the contestant who was eliminated from the Bigg Boss show this week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எண்ணத்தில் தழுவல்கள்... சுஷ்ரி மிஸ்ரா

மஞ்சள் பூக்கள்... ரவீனா தாஹா!

நாணத்தில் கண்டேன்... ரித்தி குமார்

புதிய புன்னகை... ஸ்வேதா டோரத்தி!

நமீபியா அணியின் ஆலோசகராக கேரி கிறிஸ்டன் நியமனம்!

SCROLL FOR NEXT