களம்காவல் படத்தின் 3 நாள் வசூல்!
மம்மூட்டியின் களம்காவல் படத்தின் மூன்று நாள் வசூல் குறித்து...
நடிகர் மமூட்டியின் களம்காவல் படத்தின் மூன்று நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தெரியவந்துள்ளது.
மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் களம்காவல் எனும் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஜிதின் கே. ஜோஸ் இயக்கியுள்ளார்.
இந்தப் படம் உலகம் முழுவதும் டிச.5ஆம் தேதி வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தை, நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் மம்மூட்டி இணைந்து தயாரித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்தப் படத்தில் விநாயகன், மம்மூட்டி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், இதில் பல நடிகைகள் சிறிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கிரைம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் முதல்நாளில் உலகம் முழுவதும் ரூ.15.7 கோடி வசூலித்துள்ளதாகப் படக்குழு அறிவித்தது.
இந்த நிலையில், களம்காவல் படம் 3 நாள்களில் ரூ. 44. 15 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இந்தத் திரைப்படத்துக்கு கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டு வரும் நிலையில், ரூ.100 கோடியைத் தாண்டி வசூலிக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க: ரன்வீர் சிங் காட்டில் மழை..! 3 நாளில் துரந்தர் பட வசூல் இவ்வளவா?
Regarding the three-day collection of Mammootty's Kalamkaval
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.