சிம்பு மற்றும் வெற்றி மாறன் 
செய்திகள்

கபடி வீரராக சிம்பு? மதுரையில் அரசன் படப்பிடிப்பு!

அரசன் படப்பிடிப்பு குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

சிலம்பரசன் - வெற்றி மாறனின் அரசன் திரைப்பட படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியது.

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் வடசென்னை திரைப்படத்தின் கதையுடன் தொடர்புடைய படமாக அரசன் உருவாகிறது. இப்படத்தின் அறிவிப்பு விடியோவுக்கான செட்கள் சென்னையில் போடப்பட்டு படமாகப்பட்டது.

படப்பிடிப்பும் சென்னையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மதுரையில் முதல்கட்ட படப்பிடிப்பை நடத்த வெற்றி மாறன் திட்டமிட்டார்.

இந்த நிலையில், அரசன் முதல் நாள் படப்பிடிப்பு நேற்று (டிச.9) மதுரையில் தொடங்கியுள்ளது. மதுரை டைகர் எனப் பெயரிடப்பட்ட பனியனை சிம்பு அணிந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

முதல்கட்ட படப்பிடிப்பு மதுரையில் முடிந்ததும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கலாம் எனக் கூறப்படுகிறது.

arasan movie shoot started in madurai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

20 தொகுதிகள் ஒதுக்கும் கட்சியுடன் கூட்டணி! - விஜய பிரபாகரன் பேச்சு

சேலம் சிற்பக் கலைஞா் ராஜா ஸ்தபதிக்கு பத்ம ஸ்ரீ விருது!

ஊழல் வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட ராணுவ அதிகாரியின் ஜாமீன் மனு நிராகரிப்பு

ஆா்ஜேடி செயல் தலைவராக தேஜஸ்வி யாதவ் தோ்வு!

தருமபுரியில் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: ஆட்சியா் தொடக்கிவைத்தாா்

SCROLL FOR NEXT