ஹார்ட் பீட் இணையத் தொடரில் நடித்து கவனம் பெற்ற நடிகர் ராமிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
விமானப் பொறியியல் பட்டதாரியான நடிகர் ஆர்.ஜே. ராம், சைக்கிள் ஓட்டுதலை பொழுதுபோக்காகக் கொண்டவர்.
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய ராம், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா கல்யாணம் தொடரில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்தத் தொடரில் நடித்ததன் மூலம் இவருக்கு ஹார்ட் பீட் இணையத் தொடரில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. இதில், தனித்துவமான நடிப்பை வழங்கி மக்கள் மனங்களைக் கவர்ந்தார்.
இந்த இணையத் தொடரில் இவருக்கு ஜோடியாக யோகலட்சுமி நடித்திருப்பார். இவர்களின் ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், நடிகர் ராமிற்கு, ரஞ்சனி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களின் திருமணத்துக்கு திரைப் பிரபலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.
ஆஹா கல்யாணம் தொடரில் ராமுடன் நடித்த நடிகை ஷில்பா, ராமின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் ராம் - ரஞ்சனி ஜோடிக்கு ரசிகர்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: ஹார்ட் பீட் - 3 இணையத் தொடரின் அறிவிப்பு விடியோ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.