விஜய் Photo: TVK Youtube
செய்திகள்

விஜய்யின் தவெகவில் இணையவுள்ள சின்ன திரை பிரபலங்கள்!

தவெகவில் இணையவுள்ள சின்ன திரை பிரபலங்கள் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் சின்ன திரை பிரபலங்கள் பலரும் இணையவுள்ளார்.

சினிமா, தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஜீவா ரவி. இவர் அண்மையில் செங்கோட்டையன் உடன் தவெகவில் இணைந்தார்.

இதனிடையே, இவருடன் சேர்ந்து சின்ன திரை பிரபலங்கள் பலரும் இணையவுள்ளதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் நடிகர் ஜீவா ரவி தெரிவித்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “துணை நடிகர்கள், டெக்னீஷியன்கள், உதவி இயக்குநர்கள், நடன இயக்குநர்கள் என திரை பட்டாளத்துடன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய போகிறேன்.

நானாக யாரையும் கூப்பிடவில்லை. பதவியே வேண்டாம், தலைவர் விஜய்யுடன் களப்பணி செய்தால் போதும் எனக் கேட்டு அவர்களாகவே முன்வருகின்றனர். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கவுள்ளது. சினிமா, சின்ன திரை என பிரபலங்கள் பலரும் எங்களுடன் இணையவுள்ளனர்.

நடிகர் ஜீவா ரவி

தற்போதைய சூழலில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை. அரசியலை என்றாக கற்றுக்கொண்டு வரும் 2029-ல் போட்டியிடுவேன்" என்றார்.

தவெகவில் இணையவுள்ள திரை பிரபலங்கள் குறித்த முழு விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்த நிலையில், நடிகர் ஜீவா ரவியின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.

Many television celebrities are set to join actor Vijay's Tamizhaga Vetri Kazhagam party.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 9 மாவட்டங்களில் மழை!

100 நாள் வேலைத் திட்டத்துக்கு மாற்றாக புதிய திட்டம்: நாடாளுமன்றத்தில் மசோதா விரைவில் அறிமுகம்

மார்கழி சிறப்பு! முருகப்பெருமானுக்கு வெந்நீர் அபிஷேகம் நடக்கும் கோயில்!!

வாய்ப்புகள் காத்திருக்கு இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மார்கழியில் ஒருநாள் வழிபாட்டுக்கு ஆயிரம் ஆண்டுகள் பலன்!

SCROLL FOR NEXT