முகப்பு
செய்திகள்

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

ரெட்ட தல டிரைலர் வெளியீடு தொடர்பாக...

Updated On : 16 டிசம்பர், 2025 at 9:23 AM
ரெட்ட தல டிரைலர்
பகிர்:

நடிகர் அருன் விஜய்யின் ரெட்ட தல திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

கிரிஸ் திருக்குமரன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ரெட்ட தல.

ஆக்‌ஷன் திரில்லர் படமான இப்படத்தில், நடிகர்கள் சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன், ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

சாம் சிஸ் இசையமைத்த இப்படத்தின் 2 பாடல்கள் முன்னதாக வெளியாகி இணையத்தில் வைரலானது.

பாபி பாலச்சந்திரன் தயாரித்துள்ள இந்தப் படம், வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள ரெட்ட தல படத்தின் டிரைலரை, படக்குழு வெளியிட்ட நிலையில், இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

summary

Retta Thala trailer release.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.