படம் | பராசக்தி படக்குழுவின் சமூக ஊடகப் பதிவு 
செய்திகள்

பராசக்தி படத்தின் உரிமத்தைப் பெற்ற பிரபல ஓடிடி நிறுவனம்!

பராசக்தி படத்தின் உரிமத்தைப் பெற்ற பிரபல ஓடிடி நிறுவனம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் ஓடிடி உரிமத்தை ஜீ5 நிறுவனம் பெற்றுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் சுதா கொங்காரா கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம் பராசக்தி.

மொழிப்போர் காலங்களில் மதராஸ் மாகாணத்தில் நடைபெற்ற ஹிந்தித் திணிப்பு போராட்டத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.

மேலும், தமிழ் மொழியின் சிறப்புகளையும் அன்றைய அரசியலை மையப்படுத்தியும் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில், நடிகர்கள் ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் வரும் ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில், பராசக்தி படத்தின் ஓடிடி உரிமத்தை ஜீ5 நிறுவனம் ரூ. 52 கோடிக்கு வாங்கியுள்ளதாகவும், தொலைக்காட்சி உரிமத்தை கலைஞர் டிவி வாங்கியுள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.

It has been reported that Zee5 has acquired the OTT rights for actor Sivakarthikeyan's film 'Parasakthi'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டின் ஞாபகம்: மத்திய அரசு மீது கனிமொழி எம்.பி. கடும் தாக்கு!

தி ராஜாசாப் படத்தின் விடியோ பாடல்!

சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்க தேவையில்லை: 2026 இறுதிக்குள் புதிய சுங்கக்கட்டண வசூல் முறை அமல்!

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!

அதிபர் டிரம்ப்பின் புதிய மருமகள் பெட்டினா ஆண்டர்சன்!

SCROLL FOR NEXT