ஜன நாயகன் : நடிகர் விஜய்யின் ஜன நாயகன் படத்தின் 2வது பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இயக்குநர் எச். வினோத் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜன. 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் 2-வது பாடலான ஒரு பேரே வரலாறு பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது.
இப்படத்தில், நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூவும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரிலுள்ள புக்கிட் ஜலீல் மைதானத்தில் டிச. 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஜன நாயகன் திரைப்படத்தின் டிரைலரை புத்தாண்டு அன்று (ஜன. 1) வெளியிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்ப்படத்தின் முதல் பாடலான ’தளபதி கச்சேரி’ அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அனிருத் இசையமைப்பில் அறிவு எழுதிய இப்பாடலை நடிகர் விஜய், அனிருத், அறிவு ஆகியோர் பாடியிருந்தனர்.
இந்த நிலையில், ஜன நாயகன் படத்தின் 2வது பாடலான ’ஒரு பேரே வரலாறு’ பாடலின் லிரிக்கல் விடியோ இன்று (டிச. 18) மாலை 6.30 மணிக்கு வெளியானது.
இதையும் படிக்க: 2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.