இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் “அரசன்” திரைப்படத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் நடிகை யோகலட்சுமி இணைந்துள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் - நடிகர் சிலம்பரசன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம் “அரசன்”. வடசென்னை திரைப்படத்தின் உலகில் மற்றொரு கதைகளத்துடன் இந்தப் படம் உருவாகி வருகின்றது.
இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் உருவாகும் அரசன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த டிச.9 ஆம் தேதி மதுரையில் துவங்கியது. ஏற்கெனவே, இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் இணைந்துள்ளார்.
இந்த நிலையில், அரசன் திரைப்படத்தில் நடிகை யோகலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் மற்றும் “ஹார்ட் பீட்” தொடர் ஆகியவற்றில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததினால் நடிகை யோகலட்சுமி ரசிகர்களிடையே கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.