சூர்யா நடித்த கருப்பு திரைப்படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகாதது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த கருப்பு திரைப்படம், நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து அதில் கடவுள் நம்பிக்கைகளை இணைத்து உருவாகியுள்ளது.
இதில் வழக்குரைஞரான சூர்யாவுடன் த்ரிஷா, ஸ்வாசிகா, காளி வெங்கட், இந்திரன்ஸ், யோகி பாபு, நட்டி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிக தொகைக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், சாட்டிலைட் உரிமத்தை ஜீ5 நிறுவனமும் கைபற்றியுள்ளதாம்.
கருப்பு திரைப்படத்தை அடுத்தாண்டு ஜன. 23 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இப்படத்தின் டீசர் மற்றும் பிற அறிவிப்புகள் குறித்து எந்த அப்டேட்களும் வெளியாகததால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். திட்டமிட்ட தேதிக்கு வெளியாகுமா அல்லது பிப்ரவரி வெளியீடாகத் திரைக்கு வருமா என கேள்விகளும் எழுந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.