செய்திகள்

கோபி - சுதாகர் நடிக்கும் ‘ஓ காட் பியூட்டிஃபுல்’

கோபி - சுதாகர் நடிக்கும் படம் குறித்து...

DIN

பரிதாபங்கள் கோபி - சுதாகர் இணைந்து நடிக்கும் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

பரிதாபங்கள் எனும் யூடியூப் சேனலின் மூலம் மக்களிடையே பிரபலமானவர்கள் கோபி மற்றும் சுதாகர். இந்த சேனலுக்கு 60 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் இருக்கின்றனர்.

சமூக வலைதளங்களில் இவர்களது மீம்ஸ், புகைப்படங்கள் என அடிக்கடி டிரெண்டிங்கில் இருக்கும் பிரபலங்கள். 

கடந்தாண்டு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், இன்று படத்திற்கு, ‘ஓ காட் பியூட்டிஃபுல்’ எனப் பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

பரிதாபங்கள் புரடக்‌ஷனில் உருவாகும் இந்தப் படத்தினை விஷ்ணு விஜயன் இயக்குகிறார். விடிவி கணேஷ், சுரேஷ் சக்கரவர்த்தி, கோதண்டன், சுபத்ரா ராபர்ட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாடல்கள் - ஜேசி ஜோ, பின்னணி இசை அருண் கௌடம். ஒளிப்பதிவு - சக்திவேல் , கே.பி. ஸ்ரீ. கார்த்திக். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முன்னாள் போட்டியாளர்கள்!

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

SCROLL FOR NEXT