சிம்பு / ஹரீஷ் கல்யாண் 
செய்திகள்

சிம்பு குரலில் ‘டீசல்’ இரண்டாம் பாடல் வெளியீடு!

டீசல் திரைப்படத்தின் இரண்டாம் பாடல் வெளியீடு.

DIN

ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள டீசல் திரைப்படத்தில் சிம்பு பாடிய இரண்டாம் பாடல் வெளியாகியுள்ளது.

பார்க்கிங், லப்பர் பந்து படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள புதிய படம் ’டீசல்’. அடங்காதே, புறநகரம் போன்ற படங்களின் இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ள இப்படத்தினை எஸ்பி சினிமாஸ் தயாரித்துள்ளது.

ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் அதுல்யா ரவி நாயகியாகவும் வினய், கருணாஸ், அனன்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

முன்னதாக வெளியான இப்படத்தின் முதல் பாடலான ‘பீர் சாங்’ சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், டீசல் படத்தில் நடிகர் சிம்பு, ஸ்வேதா மோகன் பாடியுள்ள இரண்டாவது பாடலான ’தில்லுபரு ஆஜா’ இன்று வெளியாகியுள்ளது.

இந்தப் பாடலை ரோகேஷ், ஜிகேபி ஆகியோர் எழுதியுள்ளார்.

டீசல் திரைப்படம் மார்ச் மாதம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உயிரோவியம்... அனுமோள்!

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட கூட்ட நெரிசல் பலி! ரூ.25 லட்சம் நிதியுதவி!

ஜப்பான் பயணம் நிறைவு! சீனா புறப்பட்டார் பிரதமர் மோடி!!

குடை எடுத்துச் செல்லுங்கள்.. இன்றும், நாளையும் வெப்பநிலை உயரும்!

ஒட்டுமொத்த கிராமத்தை ஒரே வீடாக மாற்றிய தேர்தல் ஆணைய மேஜிக்: ராகுல்

SCROLL FOR NEXT