செய்திகள்

கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி படப்பிடிப்பு தீவிரம்!

நோலன் இயக்கிவரும் ஒடிசி படப்பிடிப்பு குறித்து...

DIN

இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கும் ஒடிசி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஞ்ஞானத்தை திரைப்படுத்திய அறிவார்ந்த இயக்குநர் எனப் பெயரெடுத்தவர் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன். இதுவரை, இவர் இயக்கிய அனைத்து படங்களும் வெற்றியை மட்டுமே பெற்றிருக்கின்றன. மொமண்டோ, பேட்மேன், இண்டர்ஸ்டெல்லர் என நீளும் பட்டியலில் இறுதியாக ஓப்பன்ஹெய்மரும் ஆஸ்கர் விருதுகளைத் தட்டியது.

பல விமர்சகர்களாலும் திரைத்துறைக்கு வந்த விஞ்ஞானி என்றே நோலன் பாராட்டப்படுகிறார். சமீபத்தில், இங்கிலாந்து அரசு நோலனுக்கு சர் பட்டத்தை வழங்கி கௌரவித்தது.

இதற்கிடையே, கிறிஸ்டோஃபர் நோலன் அடுத்து என்ன படத்தை இயக்கவுள்ளார் என்கிற ஆவலும் ரசிகர்களிடம் இருந்தது. தொடர்ந்து, யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டது.

அதன்படி, பிரபல கிரேக்க கவிஞரான ஹோமர் எழுதிய ‘த ஒடிசி (the odyssey)' கவிதையை நோலன் இயக்கவுள்ளார். படத்திற்கும் அதே பெயரையே வைத்துள்ளனர். உலகம் முழுவதும் இப்படத்திற்கான படப்பிடிப்பு நடத்தப்படும் என்றும் புத்தம் புதிய ஐமேக்ஸ் தரத்தில் உருவாகும் என்றும் கூறியுள்ளனர்.

படத்தின் நாயகனாக மெட் டாமன் (Matt doman) நடிக்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. முக்கியமாக, ஒடிசி கவிதையில் இடம்பெற்றுள்ள ராட்சத குதிரை ஒன்றை தற்போது வடிவமைத்து வருகின்றனர்.

மெட் டாமன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இந்தியாவுக்கு எதிராக பென் டக்கெட் - ஸாக் கிராலி இணை சாதனை!

Shahrukh Khan-க்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது

SCROLL FOR NEXT