கேட் வின்ஸ்லட் 
செய்திகள்

இயக்குநராகும் டைட்டானிக் நாயகி!

நடிகை கேட் வின்ஸ்லட் இயக்குநராகிறார்...

DIN

பிரபல ஹாலிவுட் நடிகை கேட் வின்ஸ்லட் இயக்குநராக அறிமுகமாகிறார்.

டைட்டானிக் படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானவர் நடிகை கேட் வின்ஸ்லட் (kate winslet). கதைநாயகனை மூர்க்கமாகக் காதலிக்கும் நாயகியாக நடித்த கேட், படத்தில் பேரழகியாகக் காட்சிப்படுத்தப்பட்டார்.

நாயகன் டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லட்டை ஓவியமாக வரையும் காட்சி இன்று வரை மிகப்பிரபலம். இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனால் பிரம்மாண்ட வெளிச்சம் கிடைத்த கேட் வின்ஸ்லட் சினிமாத்துறையில் பெரிதாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சில வெற்றிப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களைத் தாண்டி அவரால் உச்சம் தொடமுடியவில்லை.

கேட் வின்ஸ்லட்

இந்த நிலையில், முதல் முறையாக கேட் வின்ஸ்லட் ‘குட்பை ஜூன்’ (Gooodbye june) என்கிற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாவதுடன் இப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்கிறார்.

இங்கிலாந்தில் நடக்கும் ஜனரஞ்சகமான கதையாக இது இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தை நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியிட திட்டமிட்டுள்ளனராம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

SCROLL FOR NEXT