சிவாலயத்தில் வழிபாடு செய்யும் மதுமிதா படம் | இன்ஸ்டாகிராம்
செய்திகள்

காசியில்... சிவராத்திரி வழிபாட்டில் சின்ன திரை நாயகி!

காசிக்குச் சென்றுள்ள மதுமிதா, சிவன் கோயில்களில் தரிசனம் செய்து ரசிகர்களுக்கு சிவராத்திரி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

DIN

சின்ன திரை நாயகி மதுமிதா சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.

காசிக்குச் சென்றுள்ள அவர், சிவன் கோயில்களில் தரிசனம் செய்த விடியோக்களைப் பதிவிட்டு ரசிகர்களுக்கு சிவராத்திரி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அய்யனார் துணை தொடரில் நாயகியாக நடித்துவருபவர் நடிகை மதுமிதா. இவர் இதற்கு முன்பு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் பாகம் 1-ல் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர்.

இத்தொடரில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது அய்யனார் துணை என்ற தொடரில் நாயகியாக நடித்துவருகிறார்.

இவர் இத்தொடரில் நடிக்க ஒப்பந்தமான பிறகே எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியானது. எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்தில் மதுமிதாவுக்கு பதிலாக பார்வதி நாயகியாக நடித்துவருகிறார்.

அய்யனார் துணை தொடரில்...

படப்பிடிப்பு இல்லாத நாள்களில், பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாகக் கொண்ட மதுமிதா, சமீபத்தில் இலங்கைக்குச் சென்றிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது உத்தரப் பிரதேச மாநிலம் காசிக்குச் சென்றுள்ளார்.

இதையும் படிக்க | பவித்ரா தொடரில் நடிக்கும் நெஞ்சத்தைக் கிள்ளாதே நாயகி!

சிவராத்திரியையொட்டி தனது குடும்பத்துடன் காசிக்குச் சென்றுள்ள அவர், சிவன் கோயில்களில் வழிபாடு செய்துள்ளார். இது குறித்த புகைப்படங்களையும் விடியோக்களையும் பகிர்ந்து ரசிகர்களுக்கு சிவராத்திரி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இலங்கையில் ஆஞ்சனேயர் பாதம் பட்ட இடத்திற்குச் சென்று வழிபாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஆஞ்சனேயர் கோயிலில் மதுமிதா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT