முகப்பு
செய்திகள்

ஆஸ்கர் விருது வென்ற நடிகர், மனைவி மர்ம மரணம்..!

ஆஸ்கர் விருது வென்ற நடிகர் ஜெனே ஹேக்மேன் அவரது வீட்டில் மர்மமாக இறந்துள்ளார்.

Updated On : 27 பிப்ரவரி, 2025 at 4:04 PM
ஜெனே ஹேக்மேன் - படம்: ஏஎன்ஐ
பகிர்:

ஆஸ்கர் விருது வென்ற நடிகர் ஜெனே ஹேக்மேன், அவரது மனைவி, அவரது நாய் என அனைவரும் இறந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த மரணத்துக்கு காரணம் என்னவென்று காவல்துறை இதுகுறித்து விளக்கம் அளிக்கவில்லை. விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாண்டா ஃபே கவுண்டி காவல்துறை ஊடகப் பிரிவினர் டெனிஸ் அவில்லா புதன்கிழமை மதியம் 1.45 மணிக்கு பக்கத்து வீட்டாரின் அழைப்பின் பேரில் சோதிக்க சென்றபோது ஹேக்மேன், அவரது மனைவி பெட்ஸி அரகாவா, அவர்களது வளர்ப்பு நாய் இறந்து கிடந்ததை உறுதி செய்துள்ளார்.

Advertisement

95 வயதாகும் ஜெனே ஹேக்மேன் ஹாலிவுட் சினிமாவில் மிகவும் மதிப்புமிக்க நடிகராக அறியப்பட்டு வந்தவர்.

2 ஆஸ்கர் விருதுகள், 4 கோல்டன் குளோப் விருதுகள், 2 பிரிடீஷ் அகாதெமி விருதுகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக 2004இல் வெல்கம் டூ மூஸ்போர்ட் படத்தில் நடித்திருந்தார்.

அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரது நடிப்பினை குறித்து பாராட்டி பதிவிட்டு வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.