குட் பேட் அக்லி வெளியீட்டுத் தேதி இதுதானா?
குட் பேட் அக்லி வெளியீடு குறித்து...
நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படதின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், இதில் அஜித் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடித்துள்ளார்.
அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: மிகப்பெரிய பட்ஜெட்! ஆவேஷம் இயக்குநரின் கதையை இயக்கும் சிதம்பரம்!
தற்போது, இப்படத்தின் டப்பிங் பணிகளை அஜித் முடித்துள்ளார். படப்பிடிப்பு துவங்கும்போதே இந்தாண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரும் என கூறியிருந்தனர்.
ஆனால், முதலில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் பொங்கல் வெளியீட்டை குட் பேட் அக்லி தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைத்தது. தற்போது, விடாமுயற்சியும் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவில்லை.
இந்த நிலையில், குட் பேட் அக்லி திரைப்படத்தை ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான, அறிவிப்பு போஸ்டர் பொங்கல் அன்று வெளியாகலாம் எனத் தெரிகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.