கட்டுப்பாட்டை இழந்த அஜித்: நொறுங்கிய கார் - விடியோ!
அஜித்தின் ரேஸ் கார் விபத்து..
நடிகர் அஜித் குமார் கார் ரேஸ் பயிற்சியின்போது விபத்தில் சிக்கினார்.
நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு வந்தார்.
இதற்காக, கடந்த ஆண்டே ’அஜித் குமார் ரேஸிங்’ என்கிற நிறுவனத்தை தொடங்கினார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: கார் ரேஸ் பயிற்சி: விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்!
இந்த நிலையில், துபையில் கார் ரேஸுக்கான பயிற்சியில் ஈடுபட்டபோது கட்டுப்பாட்டை இழந்த அஜித்தின் கார் தடுப்பின் மீது மோதியது. இதனால், வேகமாக சில வினாடிகள் சுழன்ற காரின் முன்பக்கம் கடுமையாக சேதமானது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக நடிகர் அஜித் காயமின்றி தப்பியுள்ளார். கார் விபத்திற்குள்ளாகும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபெரரி வகைக் காரான இதன் விலை ரூ. 9 கோடியாம்.
விபத்தையொட்டி பயிற்சி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.