செய்திகள்

வாடிவாசல் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி?

வாடிவாசல் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி...

DIN

வாடிவாசல் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இணையலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

கங்குவா படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெற்றிமாறன் விடுதலை - 2 படப்பிடிப்பில் தீவிரமாக இருந்தார்.

இதனால், கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து முடித்த சூர்யா அடுத்தாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

தற்போது, இயக்குநர் வெற்றிமாறனும் விடுதலை - 2 வெளியீட்டை முடித்துள்ளதால், வாடிவாசல் திரைப்படத்தின் பணிகள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் துவங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

வெற்றி மாறன் இப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கும் திட்டத்தில் இருப்பதாகவும் ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், வாடிவாசலில் நாயகியாக நடிக்க நடிகை ஐஸ்வர்யா லட்சுமியிடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் இப்படத்தில் நடிக்கும் திட்டத்தில் ஐஸ்வர்யா இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் நாள் விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய Vijay!

டிசிஎஸ் 3வது காலாண்டு லாபம் 14% சரிவு!

சிபிஐ வலையில் சிக்கிக்கொண்ட விஜய்! - செல்வப் பெருந்தகை | செய்திகள் : சில வரிகளில் | 12.1.26

மமதா மீது சிபிஐ வழக்குப் பதிய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு!

குளிர் அலை: அதிகாலையில் நடைப்பயிற்சி வேண்டாமே! செய்யக்கூடாதவை..

SCROLL FOR NEXT