சந்தோஷ் / மெளனிகா இன்ஸ்டாகிராம்
செய்திகள்

சின்ன திரை நடிகரை மணந்த லப்பர் பந்து பட நடிகை!

ரஞ்சனி தொடர் நாயகன் சந்தோஷ், தனது நீண்ட நாள் காதலியான நடிகை மெளனிகாவை திருமணம் செய்துள்ளார்.

DIN

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரஞ்சனி தொடரின் நாயகன் சந்தோஷ், தனது நீண்ட நாள் காதலியான நடிகை மெளனிகாவை திருமணம் செய்துள்ளார். இவர் சமீபத்தில் வெளியான லப்பர் பந்து படத்தில் நடித்து கவனம் பெற்றார்.

சின்ன திரையில் ஒளிபரப்பாகிவரும் ரஞ்சனி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தத் தொடரில் நடிகர் சந்தோஷ் நாயகனாக நடிக்கிறார். இதுமட்டுமின்றி இதற்கு முன்பு அண்ணா தொடரில் நடித்திருந்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை ஜீ தமிழில் ஒளிபரப்பான கன்னத்தில் முத்தமிட்டால் தொடரில் நாயகனாகவும் நடித்திருந்தார். இதில், மனிஷாஜித், திவ்யா பத்மினி என இரு நாயகிகள் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தனர்.

இதுமட்டுமின்றி புதிய பார்வை என்ற குறும்படத்திலும் சந்தோஷ் நடித்துள்ளார். தற்போது சின்ன திரையில் நடித்துவந்தாலும் சினிமாவில் நடிப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாகியுள்ளார்.

இந்நிலையில் இவர் நடிகை மெளனிகாவை நீண்ட நாள்களாகவே காதலித்துவந்துள்ளார். பிளாக் ஷீப் யூடியூப் சேனல்களின் தொடர்களிலும், கனா காணும் காலம் தொடரிலும் மெளனிகா நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான லப்பர் பந்து படத்தில் நாயகனின் முன்னாள் காதலியாக நடித்திருந்தார். இந்த பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இருவரும் நடிப்புத் துறையில் தங்கள் முயற்சிகளை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்சென்றுகொண்டிருக்கும் நிலையில், சந்தோஷும் மெளனிகாவும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

சந்தோஷ் / மெளனிகா

கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் எளிமையான முறையில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இதில் கலந்துகொண்டனர். திருமண புகைப்படங்களை மெளனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சந்தோஷ் / மெளனிகா

ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் காதல் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தசரா: பரேலியில் ட்ரோன்கள் மூலம் தீவிர கண்காணிப்பு! இணைய சேவைகள் துண்டிப்பு!

புதிய ரேஸுக்கு தயாராகும் அஜித், நரேன் கார்த்திகேயன்!

தங்கம் விலை உயர்வு! இன்று மாலை நிலவரம்!

அதிவேகமாக 50 விக்கெட்டுகள்... டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை!

ஜாவா சுந்தரேசன் எனப் பெயரை மாற்றிக்கொண்ட சாம்ஸ்!

SCROLL FOR NEXT