செய்திகள்

அரசியலுக்கு வருகிறாரா த்ரிஷா?

த்ரிஷா அரசியலுக்கு வருவதாக வதந்தி பரவி வருகிறது...

DIN

நடிகை த்ரிஷா அரசியலுக்கு வரப்போவதாக பலர் பதிவிட்டு வருகின்றனர்.

நடிகை த்ரிஷா லியோ, பொன்னியின் செல்வன் படங்களைத் தொடர்ந்து விடாமுயற்சி, குட் பேட் அக்லியில் நடித்து முடித்துள்ளார்.

இதற்கிடையே, கோட் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி வைரலானார். அண்மையில், இவர் நடித்த மலையாளப் படமான ஐடெண்டி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

சினிமா மட்டுமல்லாது சில தொழில்களிலும் முதலீட்டாளராக இருக்கும் த்ரிஷாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. அது குறித்து கேள்விகளையும் மறுத்து வருகிறார்.

இந்த நிலையில், சில நாள்களாக த்ரிஷா நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளார் என தகவல் பரவி வருகிறது. பல செய்தி நிறுவனங்களும் இதனைச் செய்தியாக வெளியிட்டன.

பின், த்ரிஷாவின் அம்மாவை தொடர்புகொண்டு அரசியலுக்கு த்ரிஷா வருவது உறுதியா? எனக் கேட்டதற்கு அவர், த்ரிஷா அரசியலுக்கு வரும் செய்தியில் உண்மையில்ல்லை. தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பார் எனத் தெரிவித்தாராம்.

இதனால், த்ரிஷா அரசியலுக்கு வரவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிவாங்கி!

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

SCROLL FOR NEXT