மகிழ் திருமேனி 
செய்திகள்

என் தனிப்பட்ட வாழ்க்கையைக் கூறுவதில் விருப்பமில்லை: மகிழ் திருமேனி

மகிழ் திருமேனி தன் சொந்த வாழ்க்கை குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்...

DIN

இயக்குநர் மகிழ் திருமேனி தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பொதுவெளியில் பகிர விருப்பமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கிய விடாமுயற்சி திரைப்படம் பிப். 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வர வேண்டிய படமென்பதால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தற்போது, படத்திற்கான புரமோஷன் நேர்காணல்களில் இயக்குநர் மகிழ் திருமேனி கலந்துகொண்டு பேசி வருகிறார்.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய மகிழ் திருமேனி, "மகிழ் திருமேனி என்பது நானே எனக்கு வைத்துக்கொண்ட புனைபெயர். இப்படித்தான் நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். பெற்றோர் வைத்த பெயரை பொதுவெளியில் சொல்ல விரும்பவில்லை. நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவன். அவ்வளவுதான். இதைத்தாண்டி, என் தனிப்பட்ட வாழ்க்கை யாருக்கும் தெரிய வேண்டாம் என நினைக்கிறேன்.

மிக சிறுவயதிலேயே இலக்கியம், அரசியல் மீது எனக்கு ஆர்வம் இருந்தது. நாவலாசிரியராக வேண்டும் என விருப்பப்பட்டேன். ஆனால், ஒருகட்டத்தில் சினிமாதான் என் துறை என முழுமையாக ஈடுபட ஆரம்பித்துவிட்டேன். விடாமுயற்சி திரைப்படத்தைப் பெரிய எதிர்பார்ப்புகளின்றி காண வாருங்கள்” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT