செய்திகள்

தான் படித்த பள்ளியில் உற்சாகமாக நடனமாடிய மமிதா பைஜூ!

மமிதா பைஜூ நடனமாடிய விடியோ வைரல்...

DIN

நடிகை மமிதா பைஜூ தான் படித்த பள்ளியில் மாணவிகளுடன் உற்சாகமாக நடனமாடியுள்ளார்.

வரதன், விக்ருதி, சூப்பர் சரண்யா உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகை மமிதா பைஜூ. மலையாளியான இவருக்கு தென்னிந்தியளவில் பெரும் புகழைப் பெற்றுத்தந்த திரைப்படம் பிரேமலு. இப்படத்தின் நாயகியாக நடித்து அசத்தியவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

தற்போது, நடிகர் விஜய்யுடன் ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்த கோட்டயத்திலுள்ள கிடங்கூர் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டுவிழாவில் மமிதா பைஜூ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

பள்ளிக்கும் தனக்குமான நினைவுகள் குறித்து பகிர்ந்தவர், மாணவர்களிடம், “உங்களையெல்லாம் பார்க்கும்போது என் பள்ளி வாழ்க்கையை ரொம்ப மிஸ் (miss) செய்கிறேன்” என்றார்.

மேலும், மாணவர்களின் விருப்பத்திற்கு இணங்க, மனசிலாயோ பாடலுக்கு மாணவிகளுடன் இணைந்து நடனமாடினார். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நாடக மேடை திறப்பு

மனநல நிறுவனங்கள் ஒரு மாத காலத்துக்குள் பதிவு செய்தல் அவசியம்!

“குழந்தைகளுக்காக போரை நிறுத்துங்கள்”..! புதினுக்கு டிரம்ப் மனைவி உருக்கமான கடிதம்!

பாகிஸ்தானில் ராணுவ ஆட்சிக்கு சதி? தலைமைத் தளபதி மறுப்பு

ராகுலுக்கு ஒரு வாரம் கெடு..! வாக்குத் திருட்டு குற்றச்சாட்டில் உறுதிமொழி பத்திரம் சமா்ப்பிக்க வேண்டும்!

SCROLL FOR NEXT