ஹார்ட்பீட் - 2 வெப் தொடரில் திடீர் திருப்பம் ஏற்பட்டிருக்கும் நிலையில், கதை தொடர்ந்து சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீபக் சுந்தர்ராஜன் இயக்கி டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரிக்கும் வெப் தொடர் ஹார்ட்பீட் - 2.
ஹார்ட் பீட் முதல் பாகத்துக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பையடுத்து இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த வெப் தொடரில் நடிகை அனுமோல், தீபா பாலு, பாடினி குமார், யோகலக்ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரிஷ், சர்வா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
மருத்துவமனையில் மருத்துவர்கள் சந்திக்கும் சவால்கள், தாய் - மகள் இருக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டம் ஆகியவற்றை மையப்படுத்தி இத்தொடர் எடுக்கப்படுகிறது.
இத்தொடரின் கதையின்படி அனுமோலின்(ரதி) மகளான தீபா பாலுவை(ரீனா) குழந்தையாக இருக்கும்போது ரதி காப்பகத்தில் விட்டு விடுகிறார். பின்னர் வேறொருவரை ரதி திருமணம் செய்துகொள்கிறார்.
இந்த நிலையில் ரீனாவின் தந்தை அறிமுகமாகும் காட்சிகள் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளன. இதனால் ரீனா மற்றும் ரதியின் கடந்த கால வாழ்க்கை தெரிய வரும்.
ரீனாவின் தந்தை டாக்டர் விஜய் பாத்திரத்தில் அறிமுகமாகவுள்ளதால், இந்தத் தொடரின் விறுவிறுப்பு மேலும் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிளாஷ்பேக் காட்சிகள் விரைவில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதால் இத்தொடரை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஹார்ட் பீட் வெப் தொடரின் இரண்டாம் பாகம் மே 22 முதல் ஒவ்வொரு வியாழக்கிழமையும் 4 எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது.
இதையும் படிக்க:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.