விஷ்ணு விஷால் தம்பி ருத்ராவின் புரமோஷன் காட்சிகள்.  படங்கள்: எக்ஸ் / விஷ்ணு விஷால் புரடக்‌ஷன்ஸ்.
செய்திகள்

நவரசத்தில் ஐந்து... விஷ்ணு விஷால், ருத்ராவின் புரமோஷன் விடியோ!

நடிகர் விஷ்ணு விஷாலும் அவரது தம்பியும் இணைந்து செய்த புரமோஷன் விடியோ குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் விஷ்ணு விஷாலும் அவரது தம்பியும் இணைந்து செய்த புரமோஷன் விடியோ வைரலாகி வருகிறது.

நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய தம்பி ருத்ராவை நாயகனாக அறிமுகப்படுத்துகிறார்.

ரோமியோ பிக்சர்ஸ், விஷ்ணு விஷால் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு ‘ஓஹோ எந்தன் பேபி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தை அறிமுக இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்க, ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.

ஓஹோ எந்தன் பேபி திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. காதலும் ஆக்சனும் கலந்த படமாக இது உருவாகியுள்ளது. டிரைலர் காட்சிகள் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்து வருகிறது.

இப்படம் ஜூலை 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவுள்ளது.

இந்நிலையில், 5 நாள்களே மீதமுள்ள நிலையில் 5 விதமான பாணியில் அதைக் கூறி ருத்ரா புரமோஷன் செய்துள்ளார்.

ருத்ராவுக்கு அருகில் விஷ்ணு விஷால் உட்கார்ந்து, “பரவாயில்லை டா என்னைவிட நல்லாவே நடிக்கிற” எனக் கூறுவது வைரலாகி வருகிறது.

A promotional video made by actor Vishnu Vishal and his younger brother is going viral.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூரிய மின் இணைப்புகளுக்கான அனுமதி: ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுரை

அம்பேத்கா் அயலக உயா்கல்வித் திட்டத்துக்கு ரூ.65 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

தில்லியில் எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு விழா: ஆக. 7- இல் பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்

புலந்த்ஷஹா் வன்முறையில் 38 போ் குற்றவாளிகள்: உ.பி. நீதிமன்றம் தீா்ப்பு

அரசமைப்பைவிட அரசியல்வாதிகள் மேலானவா்கள் அல்லா்: உயா்நீதிமன்றம் கருத்து

SCROLL FOR NEXT