பன் பட்டர் ஜாம் - அதிதி சங்கர் குரலில் வெளியான பாடல்!
பன் பட்டர் ஜாம் படத்தில் நடிகை அதிதி சங்கர் குரலில் வெளியான பாடல் குறித்து...
பன் பட்டர் ஜாம் படத்தில் நடிகை அதிதி சங்கர் குரலில் வெளியான பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் ராஜூ ஜெயமோகன். இவர் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் பன் பட்டர் ஜாம். இப்படத்தை ராகவ் மிர்தாத் இயக்கியுள்ளார். சுரேஷ் சுப்ரமணியம் கதை எழுதியிருக்கிறார்.
மேலும் இப்படத்தில் ஆத்யா பிரசாத், சரண்யா பொன்வன்னன், சார்லி, தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
ரெயின் ஆஃப் ஏரோஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவான பன் பட்டர் ஜாம் படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படம் ஜூலை 18 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் பன் பட்டர் ஜாம் படத்தின் முதல் பாடலான காஜுமா பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இப்பாடலை நிவாஸ் கே பிரசன்னா, அதிதி ஷங்கர் பாடியுள்ளனர். பாடலுக்கான வரிகளை எம்.கே. பாலாஜி எழுதியுள்ளார்.