7ஜி ரெயின்போ காலனி - 2 டீசர் அப்டேட்!
7ஜி ரெயின்போ காலனி - 2 படத்தின் டீசர் குறித்து...
7ஜி ரெயின்போ காலனி - 2 திரைப்படத்தின் டீசர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கில் வெளியான திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் ஜோடியாக நடித்திருந்தனர்.
சில மாதங்களாக 7ஜி ரெயின்போ காலனியின் இரண்டாவது பாகத்திற்கான திட்டத்தில் செல்வராகவன் ஈடுபட்டிருந்தார். இதில் ரவி கிருஷ்ணாவே நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
Advertisement
Advertisement
தற்போது, 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் 70% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளன. முதல் பாகத்தில் இருந்த கதிரின் (7ஜி நாயகன்) வாழ்க்கை 10 ஆண்டுகளுக்குப் பிறகு என்னானது என்பதை இந்தப் பாகத்தில் படமாக எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: ரஜினியிடம் கதை சொன்ன நித்திலன்!
director selvaraghavan's 7g rainbow colony - 2 movie teaser will out soon
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.