நடிகர் ரஜினி நடிப்பில் உருவான பாட்ஷா திரைப்படம் இன்று திரையரங்குகளில் மறுவெளியீடானது.
இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய பாட்ஷா திரைப்படம் 1995 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது.
தேவா இசையில் அனைத்து பாடல்களும் வரவேற்பைப் பெற்றன. இந்தப் படத்தில் ரகுவரன், நக்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.
இன்றுமுதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ள பாட்ஷா படத்தை சென்னையில் பிவிஆர் அரங்குகளில் ரசிகர்கள் காணலாம் என படக்குழு தெரிவித்துள்ளது.
இந்தப் படம் குறித்து இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, “டியர் ரஜினி சார், பாட்ஷா உங்களால்தான் உருவானது. உங்களின் துள்ளலான நடிப்பு... உன்னதமான திரை அனுபவம்...
நீங்கள் பாட்ஷாவாக நடிக்கவில்லை, வாழ்ந்தீர்கள். கல்ட் கிளாசிக்காக சினிமா வரலாற்றில் எப்போதும் நீடிக்கும்” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தப் படத்தின் மறுவெளியீடு குறித்து தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில், “மக்களால் கொண்டாடப்பட்ட பாட்ஷா திரைப்படம் இன்று அற்புதமான புதிய வடிவத்தில் திரையரங்குகளுக்குத் திரும்ப வருகிறது.
மறக்க முடியாத சினிமா அனுபவத்தை இது வழங்கும் - அடோம்ஸில் முழு ஒலிப்பதிவையும் மீண்டும் உருவாக்கி முழுமையாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது!” எனக் கூறியுள்ளது.
ரஜினி கூலி படத்தில் நடித்து முடித்து, ஜெயிலர் -2 படத்தில் நடித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.