முகப்பு
செய்திகள்

சிம்பு, வெற்றி மாறன் படத்தின் அப்டேட்!

சிம்பு, வெற்றி மாறன் படம் குறித்து...

Updated On : 27 ஜூலை, 2025 at 10:39 AM
சிம்பு, வெற்றி மாறன்
பகிர்:

நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னை படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார். இப்படத்திற்கான அறிவிப்பு விடியோ படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்று முடிந்தது.

இதில், நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடிக்க வடசென்னை படத்தில் நடித்த சில நடிகர்கள் நடிப்பதாகத் தெரிகிறது.

மேலும், இப்படத்தில் நடிகர் சிம்பு இளம் தோற்றத்தில் நடிப்பதற்காக இரண்டு வாரங்களில் 10 கிலோ வரை உடல் எடையைக் குறைத்துள்ளாராம்.

இந்த நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து வருவதாகவும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 2-வது வாரம் துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விடியோ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

actor silambarasan and vetri maaran movie shooting update

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.