கோப்புப் படம் 
செய்திகள்

சுபம் என்ற சொல்லைக் காண ஆர்வம்: எந்தத் தொடருக்குத் தெரியுமா?

சின்ன திரையில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்கள், இல்லத்தரசிகளை மட்டுமின்றி, இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் எடுக்கப்பட்டு வருகின்றன.

இணையதளச் செய்திப் பிரிவு

சின்ன திரையில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்கள், இல்லத்தரசிகளை மட்டுமின்றி, இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் எடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக ஜீ தமிழ், விஜய் மற்றும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் ஏராளமான மக்களைச் சென்று சேர்கின்றன. இதனால், இந்த மூன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் அதிக டிஆர்பி புள்ளிகளையும் பெறுகின்றன.

மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற தொடர்கள் ஓரிரு ஆண்டுகளில் நிறைவடையும் நிலையில், ஒரு சில தொடர்கள் மட்டுமே 5 ஆண்டுகளைத் கடந்து ஒளிபரப்பாகின்றன. அவ்வாறு ஒளிபரப்பாகும் தொடர்கள், ரசிகர்களிடையே சலிப்பை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.

சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி முடிந்த செம்பருத்தி தொடர் 5 ஆண்டுகளைக் கடந்து ஒளிபரப்பானது. ஆனால், அத்தொடரும் இடையிடையே சலிப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது.

செம்பருத்தி தொடர்

தற்போது விஜய் தொலைககட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடர் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. எனினும் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

பாக்கியலட்சுமி தொடர்

இன்னும் இரு வாரங்களில் பாக்கியலட்சுமி தொடர் முடியவுள்ள நிலையில், இது குறித்து ரசிகர் ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் இரண்டாவது இறுதி வாரத்துக்கான முன்னோட்ட (ப்ரோமோ) விடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், ஒருசிலர் எதிர்மறையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

ரசிகர்களின் சில கருத்துகள்

அதில் ஒருவர், பாக்கியலட்சுமி தொடரில் சுபம் என்ற வார்த்தை ஒளிபரப்பாவதைக் காண ஆவலுடன் இருப்பதாகப் பதிவிட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவு ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இதையும் படிக்க | பாக்கியலட்சுமி வெறும் தொடர் அல்ல; பாடம்: நடிகை நேகா நெகிழ்ச்சி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிப்பூர் செல்கிறாரா பிரதமர் மோடி?

கொலைகள் ஒப்பீடு! தில்லியைவிட சிகாகோவில் 15 மடங்கு அதிகம்!

ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு!

சொல்லப் போனால்... சுதேசி கொள்கையும் ஏற்றுமதிச் சிக்கல்களும்

சென்னை: நள்ளிரவு கனமழையால் விமான சேவை பாதிப்பு!

SCROLL FOR NEXT