முகப்பு
செய்திகள்

மிஸ்டர் மனைவி தொடர் நாயகன் பிறந்தநாளில்... காதலைச் சொன்ன ஆர்த்தி சுபாஷ்!

ஆர்த்தி சுபாஷ் - பவன் ரவீந்திரா காதல் குறித்து...

Updated On : 4 ஜூன், 2025 at 12:19 PM
ஆர்த்தி சுபாஷ் - பவன் ரவீந்திரா
பகிர்:

மிஸ்டர் மனைவி தொடர் நாயகன் பவன் ரவீந்திராவின் பிறந்தநாளில் தனது காதலைக் கூறியுள்ளார் நடிகை ஆர்த்தி சுபாஷ்.

யூடியூபில் குறும்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆர்த்தி சுபாஷ். இதனைத் தொடர்ந்து, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் தொடரின் மூலம் சின்ன திரையில் அறிமுகமானார். இத்தொடரில் மல்லிகா பாத்திரத்தில் தனக்கே உரிய நகைச்சுவை கலந்த துணிச்சலான பாணியில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

இத்தொடரில் நடித்ததன் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார் ஆர்த்தி. இத்தொடர் முடிவுக்கு வந்ததையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வீட்டுக்கு வீடு வாசப்படி தொடரில் நடித்தார்.

இத்தொடரைத் தொடர்ந்து, தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம் தொடரில் பைரவி என்ற பிரதான பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் அவ்வபோது விடியோக்களை வெளியிட்டு வரும் ஆர்த்தி, மிஸ்டர் மனைவி தொடர் நாயகன் பவன் ரவீந்திராவுக்கு பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்து, அதில் தன்னுடைய காதலையும் சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஆர்த்தி சுபாஷின் பதிவில், ”உனக்கு சிறந்தவை மட்டுமே கிடைக்க வேண்டுமென்று இன்றும் என்றும் வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்து இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஆர்த்தி சுபாஷ் - பவன் ரவீந்திராவுக்கு சின்ன திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் பவன் ரவீந்திரா மிஸ்டர் மனைவி தொடரில் நடித்து கவனம் பெற்றவர். இவர் தற்போது ஜீ தெலுங்கில் தீர்க்க சுமங்களி பவா என்ற தொடரில் நடித்து வருகிறார்.

விஷன் டைம் நிறுவனம் தயாரிக்கும் புதிய தொடரில் தேப்ஜானியுடன் உடன் பவன் மீண்டும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ரசிகர்களைக் கவரும் சின்ன மருமகள் தொடர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.